SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாமியார் மீது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார்

2018-06-13@ 00:35:13

புதுடெல்லி : தாதி மகராஜ் என்ற சாமியார் மீது அவரது 25 வயது பெண் சீடர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெற்கு டெல்லி  பதேபூர் பெரி காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது. தாதி மகராஜிடம் பல ஆண்டுகளாக சீடராக உள்ளேன். என்னை பெண் சீடர் ஒருவர் சாமியாரின் அறைக்குள் கட்டாயப்படுத்தி அனுப்பினார். மறுத்தால், சாமியாரிடம் உடலுறவு கொண்டார் என ஆசிரமம் முழுவதும் பொய் பரப்பி விடுவேன் என மிரட்டினார். என்னை சாமியாரும், அவரது இரு சீடர்களும் பலமுறை  பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆசிரமத்தில் என்னை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதையடுத்து சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு திரும்பினேன்.  

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்து விலகி விட்டேன். இந்த பாதிப்பில் இருந்து விடுப்பட்டு மனவேதனை நீங்கிய பிறகு புகார் அளிக்க முடிவு செய்தேன்.  இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.  சாமியாருடன் மேலும் இரு அவரது சீடர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தேன். அந்த பெண்ணின் பாதிப்பு மனதை உருக்குவதாக உள்ளது. அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவருக்கு பாதுகாப்பு கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தாதி மகாராஜ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்