SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்காடு அருகே பரபரப்பு : கத்திமுனையில் டிரைவரை தாக்கி சொகுசு கார் கடத்தல் ; சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம்

2018-06-13@ 00:34:40

சென்னை: சென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (30). இவர் தனது சொகுசு காரை, தனியார் கால் டாக்சி  நிறுவனத்திற்காக வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சவாரிக்கு புறப்பட்டார். நள்ளிரவில் போரூர் சவாரியை  முடித்துவிட்டு அங்கிருந்து நேற்று அதிகாலை காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே வந்து கொண்டிருந்த  போது 3 பேர், கைகாட்டி காரை மறித்துள்ளனர். ‘’சவாரிக்குத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து காரை நிறுத்தியதும் 3 பேரும் காருக்குள் ஏறினர்.  பின்னர் அவர்கள், கத்தி முனையில் மிரட்டி செல்வத்தை சரமாரியாக  தாக்கினர். பின்னர் அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச்சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், தனது கார் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். போரூர்  காவல் உதவி ஆணையாளர் சந்திரசேகர் உத்தரவின்படி மாங்காடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர்  விரைந்து செயல்பட்டு கார் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன் கடத்தப்பட்ட காரின் நம்பரை தெரிவித்து அனைத்து  காவல்நிலையமும் உஷார்படுத்தப்பட்டது. இதன்பிறகு கடத்தப்பட்ட காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை ஆய்வு செய்தபோது, வண்டலூர்  ஜிஎஸ்டி சாலை நோக்கி அதிவேகமாக கார் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அந்த காரை விரட்டினர். சினிமா பாணியில்  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரட்டி சென்று, ஊரப்பாக்கம் அருகே காரை சுற்றிவளைத்து மடக்கினர்.

இதற்கிடையே போலீசார் துரத்துவதை தெரிந்துகொண்ட கடத்தல்காரர்களில் 2 பேர், காரை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில்  ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில் அவர், மாங்காடு அருகே பெரியபணியச்சேரி பகுதியை சேர்ந்த அப்துல் அமீது (21). இவர் மீது மாங்காடு  காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு கொண்டு  வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தப்பியோடிவிட்ட 2  பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்