SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் நிலையத்தில் தவறி நிற்கும் குழந்தைகளை பாதுகாக்க எழும்பூரில் பயணிகளுக்கு 3 மொழிகளில் விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு: ஆடியோவை ரயில்வே போலீஸ் எஸ்.பி. வெளியிட்டார்

2018-06-13@ 00:32:33

சென்னை: ரயில் நிலையத்தில் தவறி நிற்கும் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் 3 மொழிகளில் அறிவிப்புகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், அருேணாதயா குழந்தை தொழிலாளர்கள் மையத்தினரும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.இந்த நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைகள் போதைக்கு அடிமை ஆவதால் அவர்களுக்கும் அவர்களது கல்விக்கும் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவைகள் குறித்து பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழாவின் போது, ரயில் நிலையங்களில் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படுவது போல், குழந்தைகள் ரயில் நிலையத்தில் எங்கேயும் தவறி நின்று கொண்டிருந்தால் அவர்களை ரயில் நிலையத்தில் உள்ள குழந்தைகள் உதவி மையத்தில் ஒப்படைக்கவும், இல்லையெனில் குழந்தைகள் உதவி மைய இலவச எண்ணிற்கு (1098) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும், பயணிகளுக்கு அறிவுறுத்தும் வண்ணம் 3 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், இந்தி) அறிவிப்புகளை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் அறிவிக்கும் வகையிலான ஆடியோவை சென்னை கோட்ட ரயில்வே போலீஸ் எஸ்.பி. ரோகித்நாதன் ராஜகோபால் நேற்று மாலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை போலீஸ் டி.எஸ்.பி வழங்கினார். பின்னர் சில பயணிகளுடன் சேர்ந்து அனைவரும் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்