SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

2018-06-13@ 00:31:31

சென்னை: பல்லாவரம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.   சென்னை பம்மல் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (எ) கோபிநாத் (22). வீடு வீடாக சென்று பழைய பேப்பர்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே வசித்து வரும் ரதி (15), (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மாணவியை காதலித்துள்ளார். கடந்த 8ம்தேதி இரவு ஆசை வார்த்தை கூறிய கோபி, ரதியை கடத்தி  பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். வெளியில் சென்ற மகள் இரவு வரை வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரதியை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதையறிந்த கோபி, சிறுமி ரதியை யாருக்கும் தெரியாமல் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார்.இதையடுத்து சிறுமி மற்றும் பெற்றோரை காவல்நிலையம் அழைத்து சென்று ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கோபி தன்னை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம்  செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் பதுங்கியிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கோபியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து  புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்