SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீசாரின் வீடுகளை குறி வைத்து திருடிய பலே ஆசாமி கைது

2018-06-13@ 00:30:51

மும்பை : போலீசாரின் வீடுகளை குறிவைத்து திருடி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சயான் கோலிவாடாவை சேர்ந்தவர் கமல்ஜித் சிங்(20). இவர் மும்பையின் பல்வேறு பகுதியில் போலீசாரின் வீடுகளில் குறிவைத்து திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று காலாசவுக்கியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் திருடிய போது போலீசாரிடம் பிடிபட்டான். காலாசவுக்கியில் உள்ள  போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் விஜய் என்பவர் வீட்டு பூட்டை உடைத்த சிங் அங்கு இருந்த 60 கிராம் தங்க நகைகள் மற்றும் 2800 ரூபாய் பணம் போன்றவற்றை கொள்ளையடித்தான். பின்னர் அதே கட்டிடத்தில் கீழ் தளத்தில் வசித்த ராகினி என்ற கான்ஸ்டபிள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் திருட முயன்றான். ஆனால் அங்கு திருட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் அந்த வீட்டிற்குள் நுழையும் போது பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் பார்த்தார். அவர் இது குறித்து மூன்றாவது மாடியில் வசிக்கும் கான்ஸ்டபிள் யஷ்வந்த் என்பவருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.

யஷ்வந்த் கீழே இறங்கி வந்த போது அவருடன் இரண்டாவது மாடியில் வசிக்கும் அவரது சகோதரர் விஜயும் சேர்ந்து கொண்டார். இருவரும் கீழே சென்று திருடனை தேடிய போது அவர்களுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிளும் சேர்ந்து கொண்டார். அவர்கள் தூரத்தில் நடந்து சென்ற சிங்கை விரட்டிச் சென்றனர். காட்டன் கிரீன் ரயில் நிலையம் அருகில் அவன் பிடிபட்டான். அவனை போலீசார் காலாசவுக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் பரசுராம் கூறுகையில், சிறிய வயதில் சிங் பல திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளான். போலீஸ் குடியிருப்புகளை குறிவைத்து இத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான் என்று தெரிவித்தார். இது வரை 15க்கும் மேற்பட்ட போலீசாரின் வீடுகளில் சிங் தனது கைவரிசையை காட்டி இருப்பான் என்று தெரிகிறது. போலீஸ் குடியிருப்புகளில் எந்த வித பாதுகாப்பும் இருக்காது என்ற நினைப்பில் இந்த காரியத்தில் ஈடுபட்டு வந்துள்ளான். சிங் சயான் கோலிவாடாவை சேர்ந்தவன் ஆவான். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு துப்பாக்கி திருடியதாக கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்