SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மது, கஞ்சா கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்ததில் மேலும் 15 வாலிபர்களுக்கு தொடர்பு: அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்

2018-06-13@ 00:29:26

சென்னை: பள்ளி மாணவியை கடத்தி சென்று மது, கஞ்சா கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே 6 வாலிபர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மேலும், 15 வாலிபர்களுக்கும் தொடர்பு உள்ளதால் அவர்களை போலீசார்  தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவரை காதலிப்பது போல நடித்து, கஞ்சா, மது வாங்கிக்கொடுத்து வெவ்வேறு இடங்களில் வைத்து, வெவ்வேறு நாட்களில், திருவள்ளூரை சேர்ந்த ராஜேஷ்(20), தலக்காஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார்(19) ஆகியோர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை, தங்களது நண்பர்களான தலக்காஞ்சேரி கார்த்திக் (19), அருண்குமார்(20) காக்களூர் கமல் என்ற ராஜ்கமல்(23), திருவள்ளூர் மகேஷ்(20) ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களும், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் போலீசார் கார்த்திக் உள்பட 6 பேரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாணவியிடம் நடத்திய விசாரணையில் மது, கஞ்சா கொடுத்து 21 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததால் உடல் மற்றும் மனநிலை பாதித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தலைமறைவான 15 வாலிபர்களை 2 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை ைகது செய்வதோடு கஞ்சா எடுத்து வருவதையும் போலீசார் கண்டுபிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்