SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயங்கரவாதத்தை ஒடுக்க தமிழக அரசு தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

2018-06-13@ 00:28:47

தஞ்சை: தமிழக அரசு பயங்கரவாதத்தை ஒடுக்க தயாராக இல்லை என தஞ்சையில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சையில் நேற்று, நிருபர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில் இருந்து சேலத்திற்கு புதியதாக அமைக்கப்பட கூடிய 8 வழி சாலையான பசுமை சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அந்த சாலை அமைப்பதில் பொய்யான காரணங்களை காட்டி, பொதுமக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் எந்த புதிய திட்டத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வர முடியாமல் செய்து விடும். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 28 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய துறைமுகம் அமைப்பதற்கு ஒப்புதல் கொடுத்தும், அதை கிடப்பில் போட்டு, அத்திட்டத்தை கொண்டு வரக்கூடிய எந்த முயற்சியிலும் தமிழக அரசு இறங்காமல் இருப்பது மிக பெரிய வேதனையாக உள்ளது.

குளச்சலில் அமைய உள்ள துறைமுக பணிகளை துவங்க தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். காவிரி ஆணையத்தை மத்திய அரசு அமைத்து விட்டது. ஆனால் தற்போது காவிரி ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடக அரசு அறிவிக்கவில்லை. எஸ்.வி.சேகர் கைது குறித்து தமிழக அரசிடம் கேட்க வேண்டும். அவரை கைது செய்வதை பா.ஜ. தடுக்கவில்லை. தமிழக அரசு பயங்கரவாதத்தை ஒடுக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் தயாராக இல்லை. காவல்துறையும், அதிகாரிகளும் தமிழக அரசாங்கத்தால் அச்சுறுத்தப்படுகின்றனர். பாஜக எந்த கட்சியின் கூட்டணிக்காகவும் ஏங்கி நிற்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்கவே பல கட்சிகள் தயாராக உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்