SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொம்மை கார், கயிறு வடிவில் ரூ.36 லட்சம் தங்கம் கடத்திய 3 பேர் கைது : சென்னை விமான நிலையத்தில் அதிரடி

2018-06-13@ 00:28:23

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள்  நடத்திய அடுத்தடுத்த சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம்  மதிப்புடைய 1.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானத்தை நேற்று முன்தினம் நள்ளிரவு சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசலு (32) என்பவர் மலேசியா நாட்டிற்கு சுற்றலா விசாவில் போய்விட்டு திரும்பி வந்தார்.  அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை சோதித்தபோது தங்க கம்பிகளை அவர் இடுப்பை சுற்றி கட்டி வைத்திருந்தார். இதன் மொத்த எடை 400 கிராம். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 12 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து தங்க கம்பிகளை பறிமுதல் செய்தனர்.  

இதே போல் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து (36) என்பவர் சார்ஜாவுக்கு போய்விட்டு திரும்பி வந்தார். அவர் உடமைகளை சோதித்தபோது அதில் எதுவும் இல்லை. அவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது அவரது உள் ஆடைக்குள் பிளாஸ்டிக் கவருக்குள் மறைத்து வைத்திருந்த 400 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வேதச மதிப்பு ரூ. 12 லட்சம் ஆகும். இதையடுத்து அவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இதே போல் நேற்று அதிகாலை 5 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது யூனிஸ் (40) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு திரும்பி வந்தார். அவரது உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கான பொம்மை கார் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதிகாரிகள் அந்த காரை கழற்றி பார்த்த போது காரின் உள்ளே பேட்டரி போடும் இடத்தில் 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தார். அதன் மொத்த எடை 400 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 12 லட்சம். இதையடுத்து அவரையும் கைது செய்து அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அடுத்தடுத்த சோதனையில் 3 பேரிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்