SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை திருவிழாவுக்கு ரசிகர்கள் தயார்

2018-06-13@ 00:17:31

பிபா உலக கோப்பை போட்டிக்காக ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றன. மாஸ்கோ நகரில் ஒவ்வொரு  போட்டியையும் ராட்சத திரையில் கண்டு களிக்க பிரத்யேகமான அரங்கு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழாவில் முன்னணி வீரர்கள்,  ரஷ்ய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள், பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

உலக கோப்பையின்போது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு வெள்ளோட்டமாக அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டது  போட்டி அமைப்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஸ்கோவின் லஸ்னிகி ஸ்டேடியத்தில் நாளை ரஷ்யா - சவுதி அரேபியா அணிகளிடையே  நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தின்போது இங்கு ரசிகர்கள் அலைகடலெனத் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்