SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிவிட்டர் பதிவால் துபாயில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வம்சாவளி சமையல்காரர்

2018-06-13@ 00:16:45

துபாய்: அமெரிக்க தொலைக்காட்சியில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் ‘குவாண்டிகோ’ தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த ஒன்றாம் தேதி ஒளிபரப்பான இந்த நாடகத்தின் காட்சியில் இந்தியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்த காட்சி இடம்பெற்றது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா இதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் துபாயில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் மார்குயிர் ஓட்டல் தலைமை சமையலராக இருப்பவர் இந்திய வம்சவாளியை சேர்ந்த அதுல் கோச்சார். இவர் கடந்த ஞாயிறன்று தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகை பிரியங்கா சோப்ரா நீங்கள் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கின்றது” என்று பதிவிட்டு இருந்தார். மேலும் இஸ்லாம் மதத்தை தொடர்பு படுத்தியும் கருத்து கூறியிருந்தார். பின்னர் அவர் பதிவை நீக்கிவிட்டார். இந்த பதிவுக்காக அவர் மன்னிப்பும் கோரியிருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்