SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பையில் விளையாடவே ரஷ்யா வந்துள்ளேன்... : முகமது சாலா உற்சாகம்

2018-06-13@ 00:16:16

எகிப்து அணி நட்சத்திர வீரர் முகமது சாலா (25). கால்பந்து விளையாட்டில் தற்போது உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட நட்சத்திர வீரர்கள்  லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், சுவாரெஸ் போன்றவர்களுக்கு இணையாகப் பேசப்படுபவர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  லிவர்பூல் கிளப் அணிக்காக 44 கோல் அடித்துள்ள சாலாவின் ஆட்டம், உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் லீக்  தொடரின் பைனலில் ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டபோது செர்ஜியோ ராமோஸின் முரட்டுத்தனமான ஆட்டத்தால் தோள்பட்டையில் படுகாயம்  அடைந்த சாலா, கண்ணீருடன் களத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் அவர் எகிப்து அணிக்காக உலக கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியானது. எனினும், தேசிய அணிக்காக விளையாடியே தீருவேன்  என்ற உறுதியுடன் ரஷ்யா வந்துள்ள சாலா, இது குறித்து நேற்று கூறியதாவது: உலக கோப்பையில் விளையாட உள்ளதை நினைக்கும்போதே  மெய்சிலிர்க்கிறது. எந்த ஒரு கால்பந்து வீரருக்கும் இது லட்சியக் கனவாகவே இருக்கும். அந்தக் கனவு பலிக்கப்போவதை நினைத்து பெருமகிழ்ச்சி  அடைகிறேன். சாம்பியன்ஸ் லீக் பைனலில் காயம் அடைந்தது துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், நல்ல விஷயம் என்னவென்றால், இப்போது உலக கோப்பையில் விளையாடுவதற்காக ரஷ்யா வந்துள்ளேன். அதுதான் முக்கியமானது. எங்கள்  அணி 1990க்கு பிறகு உலக கோப்பை பிரதான சுற்றில் விளையாடத் தகுதி பெற்றிருக்கும் நிலையில், நான் களமிறங்க முடியாமல் போயிருந்தால்  மிகப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கும். நல்ல வேளையாக கடவுளின் அருளால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதை பற்றி நினைக்காமல், ஒவ்வொரு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும்  என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். மிகக் கடினமாக பயிற்சி செய்து தயாராகி உள்ளோம். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என  நம்புகிறேன். இவ்வாறு சாலா கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்