SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-06-13@ 00:15:09

* 2010ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், ‘ஆப்கானிஸ்தான்  அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். டெஸ்ட் அணியில் எனது இடத்தை சாதாரண வீரர் எவரிடமும்  இழக்கவில்லை. எம்.எஸ்.டோனி என்ற தலைசிறந்த வீரரிடம் தான் இழந்தேன் என்பதே எனக்கு பெருமை தான். அவர் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக  மட்டுமல்லாது இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாகவும் முத்திரை பதித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
* இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள கடினமான டெஸ்ட் தொடருக்கு, வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இடல் ரீதியாகவும் மன  ரீதியாகவும் வலுவாக தயாராக வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. அதன் காரணமாகவே அவருக்கு ஆப்கானிஸ்தான் அணியுடனான  டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடந்த யோ-யோ சோதனையில் ஷமி  உடற்தகுதியை நிரூபிக்கத் தவறியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* நம்பர் 1 அணியான இங்கிலாந்து எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி வீரர்கள், இந்த வெற்றியால் தங்கள்  அணிக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
* பிபா உலக கோப்பையின் தொடக்க லீக் ஆட்டத்தில் ரஷ்யா - சவுதி அரேபியா அணிகள் நாளை மோதவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான  முதன்மை நடுவராக அர்ஜென்டினாவை சேர்ந்த நெஸ்டர் பிடானா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை ஹாக்கி தொடர்களுக்கு தயாராகும் வகையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்களுக்கு  பெங்களூருவில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை. இறைச்சிக்கு பதிலாக வெறும் எலும்பும், பூச்சிகளும்  தான் பரிமாறப்படுகின்றன’ என்று தலைமை பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் புகார் கூறியுள்ள நிலையில், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் உறுதி அளித்துள்ளது.
* விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு தயாராகும் வகையில் குயின்ஸ் கிளப் ஏகான் கிளாசிக் போட்டியில் களமிறங்க முன்னாள்  நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) திட்டமிட்டுள்ளார்.
* ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசயில், இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 84வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
* இந்தியா - ஸ்பெயின் மகளிர் ஹாக்கி அணிகள் மோதும் 2வது டெஸ்ட், இந்திய நேரப்படி இன்று இரவு 11.00 மணிக்கு தொடங்குகிறது.
* 6 கண்டங்கள், 51 நாடுகள், 91 நகரங்கள் வழியாக 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவு பயனித்த பிபா உலக கோப்பை,  ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

 • hondu_aaas1

  அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

 • canada_cannabiss

  100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

 • harry_megaa11

  இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்