SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வடகொரியா விவகாரத்தில் இதுவரை...

2018-06-13@ 00:15:06

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே நேற்று சிங்கப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு காரணமான முந்தைய காலநிகழ்வுகளின் தொகுப்பு:
* மார்ச் 7, 2017: ஜப்பானை நோக்கி வடகொரியா 4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய மறுநாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், * வடகொரியாவின் அணுஆயுத மிரட்டல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது’ என்றார்.
* ஏப்ரல் 26, 2017: அமெரிக்க நாடாளுமன்றத்தில் வடகொரியாவின் கொள்கைகள் மற்றும் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க டிரம்பின் நிர்வாகம் கோரிக்கை.
* மே 24, 2017: அணுஆயுத சோதனை நடத்திய பைத்தியக்காரன் என கிம்மை டிரம்ப் விமர்சனம்.
* ஜூன் 1, 2017: வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனை மற்றும் ஏவுகணை சோதனை திட்டங்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பு.
* ஜூலை 4, 2017: ஜப்பானையொட்டிய கடல் மீது நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இது வடஅமெரிக்காவில் உள்ள அலாஸ்காவையும் தாக்கும் சக்தியுடைய ஏவுகணை என நிபுணர்கள் கணிப்பு.
* ஆகஸ்ட் 9, 2017: அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத்தையொட்டிய குவாம் பகுதியில் வடகொரியா நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் பதற்றம்.
* செப்.19, 2017: ஐநா பொதுச்சபையில் பேசிய டிரம்ப், `வடகொரியாவை முற்றிலும் அழிப்பேன்’ என மிரட்டல்.
* செப்.21, 2017: வடகொரியா மீது வர்த்தகம் மற்றும் கூடுதல் பொருளாதார தடைகள் விதித்தார் டிரம்ப். மேலும் ஐநாவில் பேசிய டிரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும்விதமாக பேசிய கிம், `டிரம்பின் நடவடிக்கை மனநிலை குழம்பியவர் போல் உள்ளது’ என்றார்.
* டிச.22, 2017: வடகொரியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி 90 சதவீத அளவுக்கு குறைத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை.
* ஜன.1. 2018: அமெரிக்காவின் எந்த அணுசக்தி மிரட்டலையும் முறியடிக்கும் திறன் வடகொரியாவுக்கு உள்ளதாக கிம் தனது புத்தாண்டு தின உரையில் அறிவிப்பு.
* பிப்,23, 2018: வடகொரியா மீது கப்பல் மற்றும் வர்த்தகம் தொடர்பான புதிய தடைகளை அமெரிக்கா அறிவிப்பு.
* மார்ச் 8, 2018: கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதவலிமையை குறைப்பதற்காக ஜூன் மாதத்திற்கு முன் அமெரிக்க, வடகொரிய அதிபர்கள் சந்திக்க திட்டம்.
* மார்ச் 25, 2018: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் முதல்முறையாக சீனா பயணம்.
* மே 8, 2018:  சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 2வது முறையாக சந்திக்க கிம் சீனா பயணம்.
* மே 9,2018: டிரம்ப், கிம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த 3 கைதிகள் வடகொரியா விடுதலை.
* மே 10, 2018: கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதங்களை குறைக்கும் விதமாக ஜூன் 12ல் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
* மே 15,2018: தென்கொரியா, அமெரிக்காவின் கூட்டுப்பயிற்சியை காரணம் காட்டி டிரம்ப்புடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்ய போவதாக வடகொரியா மிரட்டல்.
* மே 24, 2018: புங்கேரியில் உள்ள வடகொரியாவின் அணுஆயுத சோதனை மையம் அழிக்கப்பட்டதாக வடகொரியா அறிவிப்பு. அதே நாளில் கிம்முக்கு எழுதிய கடிதத்தில் ஜூன் 12ல் நடைபெற உள்ள இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து என டிரம்ப் அறிவிப்பு.
* மே 25: அமெரிக்காவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என டிரம்பின் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிம் கே குவான் தகவல்.
* ஜூன் 1, 2018: வடகொரியாவுடன் பேசத்தயார் என டிரம்ப் பல்டி.
* ஜூன் 10: இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்காக டிரம்ப், கிம் சிங்கப்பூர் வருகை.
* ஜூன் 12: வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை டிரம்ப், கிம் இடையே சிங்கப்பூரில் தொடங்கியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CanadaSyrianChildren

  கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

 • DroneLanternChina

  ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

 • AttukalPongalaKerala

  ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

 • mahipoornima

  கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

 • AeroShowBangalore19

  பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்