SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இங்கிலாந்து - ஆஸி. பலப்பரீட்சை

2018-06-13@ 00:14:22

லண்டன்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று  மாலை 5.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20  போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சையில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவருக்கும் தடை விதிக்கப்பட்ட பிறகு,  ஆஸ்திரேலியா சந்திக்கும் பெரிய தொடர் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் தலைமையில் களமிறங்கும்  ஆஸி. அணி, துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி  ஆட்டத்தையே பெரிதும் நம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் ரன் குவிக்க முடியாமல் தடுமாறிய மேக்ஸ்வெல், பார்முக்கு திரும்ப  வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஸ்டான்லேக் வேகமும், நாதன் லயன் சுழலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். அதே சமயம்,  ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, கற்றுக்குட்டியான ஸ்காட்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து பெரும் பின்னடைவை  சந்தித்துள்ளது. எனினும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன்  விளையாடுவது கூடுதல் சாதகமாக இருக்கும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர், கிரிக்கெட்வ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என  நம்பலாம்.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் கரன், அலெக்ஸ்  ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மைக்கேல் நெசர், ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், நாதன் லயன், ஷான்  மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்