SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்றதும்: இரவு பகலாக பயிற்சியில் இறங்கிய ஐஸ்லாந்து

2018-06-12@ 18:20:47

ரெக்ஜாவிக்:  உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள ஐஸ்லாந்து  அணி  இரவு பகலாக பயிற்சியில் இறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

மக்கள் தொகையில் மிகவும் சிறிய நாடான ஐஸ்லாந்து டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தாலும் அதிக திறமை கொண்ட, அதிரடி அணியாக உள்ளது. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் ஐரோப்பிய அளவிலான முதல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது ஐஸ்லாந்து. துருக்கி, குரோஷியா, உக்ரைன் போன்ற நாடுகளை சமாளித்துள்ளது ஐஸ்லாந்து. உலகக் கோப்பை கால்பந்து விளையாட முதன் முறையாக தகுதி பெற்றுள்ள ஐஸ்லாந்து அணி டி பிரிவில் மிகவும் வலுவான அர்ஜென்டினாவுடன் முதலில் மோதுகிறது. அதில் தோல்வியடைந்தால், நைஜீரியா மற்றும் குரோஷியாவை வென்றால் தான், அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்கிற நிலையில் இருப்பதால் எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 அர்ஜென்டினா அணியிலுள்ள நட்சத்திர வீரர்கள்  எப்படி விளையாடுகிறார்கள், அவர்களது சாதக பாதகங்களை  வீடியோவில் பார்த்து அதற்கு ஏற்றார் போல தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். ஜெர்மனி, பிரேசில் அர்ஜென்டினா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளிலுள்ள முக்கியமான வீரர்களின் ஆட்டங்களை கணித்து ஆட இப்போதே தயார் ஆகி வருகின்றனர். இதற்காக இரவு பகலாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த  2016ல் நடந்த யூரோ கோப்பையில் இங்கிலாந்து அணியை வென்று காலிறுதிக்கு ஐஸ்லாந்து முன்னேறியது. அதுதான் ஐஸ்லாந்து அணிக்கு, மிகப் பெரிய போட்டிகளில் முதல் போட்டியாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, யாரும் எதிர்பார்க்காத அசுர வளர்ச்சியை ஐஸ்லாந்து அணி  பெற்றுள்ளது. இந்த அணியின் நட்சத்திர வீரர்களான  கில்பி சிகுர்ட்சன், ஆரோன் குன்னர்சன், ஆல்பர்ட் குட்முன்ட்சன், பிர்கிர் பிஜார்னசன் ஆகியோர் இந்த அணியினை எதிர்த்து ஆட இருக்கும் அணிகளின் வீரர்களின் ஆட்டங்களை வீடியோ மூலம் பார்த்து பல்வேறு நுணுக்கங்களை கற்று வருவதாக அந்த அணியிலுள்ள முன்னணி வீரர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்