SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-06-12@ 10:57:29

ரத்தத்தில் உள்ள சிவப்புஅணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலை ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் நுரையீரல்களில் இருந்து உயிர்வளியை (ஆக்சிஜன்) உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். உடல்உறுப்புகளில் உயிர்வளி குறையும் போது நலக்குறைபாடு ஏற்படும். ஆண்களுக்கு 100மி.லி.ரத்தத்தில் 13.1முதல் 17.2கிராமும் பெண்களுக்கு 12.1முதல் 15.1ம், குழந்தைகளுக்கு 11 முதல் 16கிராமும், கர்ப்பிணிகளுக்கு 11முதல்12கிராமும் இருக்க வேண்டும்.

ஷூக்களில் இரவுநேரத்தில் பாச்சான் உருண்டைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் நெருங்காது.

குத்துவிளக்குகளை விபூதியால் தேய்த்து கழுவினால் விளக்குகள் தங்கச் சிலைபோல ஜொலிக்கும்.

பஜ்ஜி பவுடர் காலியாகிவிட்டால் கலவையில் சிறிது மஞ்சள் கலக்கினால் பஜ்ஜி மஞ்சள் நிறமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

இட்லிப் பொடி செய்யும் போது சிறிது கருவேப்பிலையையும் போட்டு மிக்சியில் அரைத்தால் மணமாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

ஈக்கள் மொய்க்கும் இடத்தில் நீரில் சிறிது உப்பை சேர்த்து கழுவினால் ஈக்கள் வராது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்