SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுநீரகக்கல் பாதிப்பு ஒருமுறை வந்தால் தொடர்ந்து வருமா?

2018-06-12@ 10:49:54

சிறுநீரகக் கற்கள் உள்ள நோயாளிகள் கட்டுப்படுத்த வேண்டிய உணவுகளை டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன்படி தக்காளி, பருப்பு வகையில் ஆக்சாலேட் அதிகம் உள்ளதால் சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகும். எனவே காலிபிளவர், கத்தரிக்காய் போன்றவற்றையும் குறைத்து கொள்ள வேண்டும். காளானில் அதிக யூரிக் அமிலம், ப்யூரின் உள்ளதால் கல் உண்டாக வாய்ப்புள்ளது. பழங்களை பொறுத்தளவில் சப்போட்டா, திராட்சை போன்றவற்றில் ஆக்சாலேட் உள்ளதால் தவிர்க்க வேண்டும். பூசணிக்காயில் மிக அதிக யூரிக் அமிலம், ப்யூரின் அடங்கி உள்ளதால் கல் உருவாக வாய்ப்புள்ளது. இதேபோல் இறைச்சி, முந்திரி போன்றவற்றையும் உணவில் குறைத்துகொள்ள வேண்டும்.

எதையெல்லாம் உணவில் சேர்க்கலாம்?: பொட்டாசியம் மக்னீசியம் அதிகம் உள்ளதால் இளநீரை பருகலாம். கேரட், பாகற்காய், வாழைப்பழம், எலுமிச்சை, அன்னாசி, பார்லி, ஓட்ஸ், பாதாம் போன்றவற்றை உண்ணலாம். சிறுநீரகக்கல் பாதிப்பை பொறுத்தளவில் ஒருமுறை வந்தால் அடுத்தடுத்து வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே உணவுக்கட்டுப்பாடு அவசியம். நீரை அதிகம் அருந்த வேண்டும். சிறுநீரை அடக்கக்கூடாது. ஒரு இடத்தில் அமர்ந்தே இருக்கும் பணிஎன்றால் அவ்வப்போது எழுந்து நடந்து சென்று திரும்ப வேண்டும். உடற்பயிற்சி அவசியம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்