SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஓடிவந்து குதித்தால் அதிக தூரத்தை கடக்க முடிகிறதே ஏன்?

2018-06-11@ 10:19:14

நியூட்டனின் இயக்க விதிப்படி உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து பொருட்களும் தான்இருக்கின்ற நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருக்கும் இயல்பு கொண்டவை. அதாவது இயங்கி கொண்டிருக்கும் பொருட்கள் இயங்கி கொண்டே இருக்கவும், நிலையான பொருட்கள் நிலையாக இருக்கவுமே செய்கின்றன. தான் இருக்கின்ற நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாற ஆற்றல் தேவை. நமது உடலும் அத்தகைய இயல்பு கொண்டதே.

நமது உடல் நிலையாக இருக்கும் நிலையில் நிலையாகவே இருக்க விரும்புகிறது. அதை மீறி நம் உடலை நாம் இயக்கத்திற்கு உள்ளாக்கும்போது அது தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்க விரும்புகிறது. நாம் நின்ற நிலையிலேயே குதித்தால் நம்மால் அதிக உயரத்திற்கோ, அதிக நீளத்திற்கோ குதிக்க முடியாது. நாம் சற்று தூரம் ஓடிய பின் குதித்தால் குறைவான ஆற்றலை செலவழித்து அதிக உயரத்திற்கு குதிக்க முடியும். ஆனால் நின்றநிலையில் குதித்தால் அதிக ஆற்றலை செலவழித்தாலும் அதிக உயரத்திற்குக் குதிக்க முடியாது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்