SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆட்டோமொபைல்: சவாலான விலையில் பலேனோ, பிரெஸ்ஸா

2018-06-10@ 00:43:31

மாருதி நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கும் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களின் ரீபேட்ஜ் மாடல்களின் விலை மிக சவாலாக நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகியும், டொயோட்டா நிறுவனமும் கார்களை ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு செய்துகொண்டன. இதன்படி, மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனமும், கரொல்லா செடான் காரை மாருதி நிறுவனமும் விற்பனை செய்வதற்கான திட்டம் போடப்பட்டுள்ளது. ரீபேட்ஜ் செய்யப்படும் கார் மாடல்கள் பொதுவாக விலை அதிகம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். உதாரணமாக, ரெனோ டஸ்ட்டர், நிஸான் பிராண்டில் டெரானோவாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நிஸான் விலை அதிகம் நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். மறுபுறத்தில், நிஸான் சன்னி கார், ரெனோ ஸ்காலா என்ற மாடலில் ரீபேட்ஜ் செய்தபோது விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ரெனோ ஸ்காலா உள்ளிட்ட ரீபேட்ஜ் செய்த மாடல்களுக்கு போதிய வரவேற்பில்லை. இதனால், ரெனோ ஸ்காலா, பல்ஸ் உள்ளிட்ட கார் மாடல்கள் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில்தான், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியும், டொயோட்டாவும் இந்த ரீபேட்ஜ் யுக்தியை கையில் எடுத்துள்ளன. மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா ரீபேட்ஜ் செய்யும்போது அதிக விலை நிர்ணயிக்கும் வகையில்தான் ஒப்பந்தம் செய்வது வழக்கம். இதுகுறித்து டொயோட்டா அதிகாரிகள் கூறுகையில், “பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மாருதி சிறப்பான மதிப்பை பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்களுக்கு அதிக அளவில் உள்ளூர் உதிரிபாகங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாக, விலையை மிக சவாலாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய மார்க்கெட்டில் விலை நிர்ணயம் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்டுள்ளோம்,” என்றனர். இதனால், டொயோட்டா பிராண்டில் வரும் மாருதி பலேனோ மற்றும் பிரெஸ்ஸா கார்கள்
மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அடுத்த ஓராண்டில் இந்த ரீபேட்ஜ் மாடல்கள் இந்திய மண்ணில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்