SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டோமொபைல்: நடுத்தர பட்ஜெட்டில் டாப் 5 ஏபிஎஸ் பைக்குகள்

2018-06-10@ 00:43:30

ஏபிஎஸ் என அழைக்கக்கூடிய ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானதாக இருப்பதால் அதை வாகனத்தில் பொருத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் ஏபிஎஸ் வசதி கொண்ட பைக்குகளில் நடுத்தர பட்ஜெட்டிற்குள் அடங்கக்கூடிய டாப் 5 பைக்குகள் குறித்த தகவல்கள் இங்கே... 2018 ஏப்ரல் 1ம்தேதிக்கு பிறகு அறிமுகமாகும் 125 சிசி பைக்குளுக்கு கட்டாயம் ஏபிஎஸ் வசதியிருக்க வேண்டும். ஆனால், பழைய பைக்குகளை அப்படியே விற்கலாம். அதேசமயம், அந்த பைக்குகளும் வரும் 2019 ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள் ஏபிஎஸ் வசதியை பெற்றிருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு நாம் வாங்கும் 125 சிசி பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயம் இருக்கும்.

பஜாஜ் பல்சர் 200 என் எஸ்
இது, சிறந்த பவர்புல்லான பைக். இதில். 199.5 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் உள்ளது. 23.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பைக்கில், முன் சக்கரத்துக்கு மட்டும் தான் ஏபிஎஸ் வசதி உள்ளது. பின் சக்கரத்துக்கு இல்லை. விலை ரூ.1,11,411. இந்த பைக்கில், பியூயல் இன்ஜெக்க்ஷன் மாடலும் விற்பனைக்கு இருக்கிறது. இதன் விலை ரூ.1,37,491.

ஹோண்டா சிபி ஹார்னட்
இந்த பைக் ஸ்போர்ட் லுக் கொண்டது. டிவிஎஸ் போலவே இந்த பைக்கிலும், முன்பக்க வீலில் மட்டும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. இந்த பைக்கின் இருக்கை, பைக் ஓட்டுபவருக்கு ஒருவித சொகுசு வழங்கும். மேலும், இதில் பெரிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இதில், 162.7 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 15.7 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. விலை ரூ.90,734.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஏபிஎஸ்
டிவிஎஸ் நிறுவனத்தின் வேகமான பைக்குகளில் இதுவும் ஒன்று. இந்த பைக்கில் பகல் நேர எல்இடி லைட் உள்ளது. முகப்பு பகுதியிலும் டேங்க் பகுதியிலும் ஏரோ டைனமிக் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், 177.4 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 17.03 பிஎச்பி பவரையும், 15.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட இந்த பைக், அதிகபட்சமாக 124 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியது. இந்த பைக், கருப்பு, வெள்ளை, க்ரே மேட், ப்ளூ ஷேட் மேட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.91,812.

சுஸூகி இன்ட்ரூடர் 150 ஏபிஎஸ்
சுஸூகி நிறுவனத்தின் மிகப்பெரிய க்ரூஸியர் பைக்கான 1800 சிசி இன்ட்ரூடர் பைக்கின், 150 சிசி வேரியன்ட்தான் இந்த பைக். இதன் சேஸிஸ், ரேக் ஆங்கில் என அனைத்தும் ஜிக்ஸெர் மாடல் பைக்கில் உள்ள அதே மாடல்தான். இதன் முன்சக்கரத்தில், சிங்கில் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பியூயல் இன்ஜெக்க்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. விலை ரூ.1,07,000.

சுஸூகி ஜிக்ஸெர்
இந்த பைக்கிலும், ஹார்னட், பல்சர் 200 என்.எஸ் போலவே முன்பக்க வீலில் மட்டுமே ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இது, ஹார்னட் பைக்கைவிட, சற்று அதிகமான ஸ்போர்ட்டி லுக் தரும். இந்த பைக்கில், 155 சிசி திறன்கொண்ட இன்ஜின் உள்ளது. இது, 14.8 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஏபிஎஸ் வசதியுடன்கூடிய விலை குறைந்த பைக் இதுதான். இந்த பைக்கின் இன்ஜின் ஹார்னட் பைக்கவிட குறைந்த அளவில் உள்ளது. ஆனால், அதைவிட அதிக பவரை டெலிவரி செய்கிறது. விலை ரூ.87,250.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்