உலக புத்தகதினம் உருவான விதமும், அதன் சிறப்புகளும்
2018-06-08@ 10:14:12

முன்னேறிய பலரது வாழ்விலும் புத்தகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வாசிக்கும் பழக்கம் ஒவ்வொருவருள்ளும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கற்பனைத்திறனை மேம்படுத்துவது மட்டுமன்றி பல்வேறு துறை ரீதியான விஷயங்களையும் அப்டேட் செய்து கொள்ளவும் புத்தகங்கள் பயன்படுகின்றன. அனைத்தையும் தேடிச் சென்று கற்க முடியாது. ஆனால் புத்தகங்கள் மூலம் வீட்டில் இருந்த படியே பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்று விட முடியும். புத்தகவாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏப்.23ம் தேதி உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் 100நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடகமேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்தநாள்தான் இது. அவர் இலக்கியம், நாடகத்துறைக்கு ஆற்றிய பணியை சிறப்பிக்கும்வகையில் அவரது இறந்தநாளிலேயே உலகபுத்தகதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யுனேஸ்கோ 1995ல் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அன்றுமுதல் உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிக்கும்உரிமை, நூலகஉரிமை, உலகில் உள்ள அனைத்து அறிவுச்செல்வங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இதற்கான திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அன்றைய தினம் பல்வேறு பதிப்பகங்களும் தங்கள் புத்தகங்களை தள்ளுபடியில் விற்பனை செய்து வாசககர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
மேலும் செய்திகள்
யாரெல்லாம் கண்தானம் செய்யலாம்... அதற்கான வழிமுறைகள் என்னென்ன?
புதிய ரெனோ டஸ்டர் அறிமுகம்
புதிய வண்ணத்தில் பஜாஜ் பல்சர் என்எஸ் 200
கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி
அமில மழையினால் ஏற்படும் பாதிப்புகள்
டிரான்ஸ்பர், கூடுதல் சீட் ஒதுக்கீட்டில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பல கோடி முறைகேடு: முன்தேதியிட்டு கையெழுத்தாகும் ஆவணங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு