SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிம்பாப்வேவை அழிக்கும் புகையிலை

2018-06-07@ 10:47:45

நன்றி குங்குமம் முத்தாரம்

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள எமர்சன் நாங்காவா, விவசாயம் தான் நாட்டின் பொருளாதார ஆதாரம் என உத்தரவிட, புகையிலை விவசாயம் குழந்தைகளையும் தொழிலாளர்களாக மாற்றி மூர்க்கமாக நடைபோடத் தொடங்கிவிட்டது. புகையிலை வணிக மதிப்பு 933.7 மில்லியன்(2016); தோராய மதிப்பில் 93.3 கோடி. புகையிலையைக் கையாளும் போது நிகோடின் உடலில் இறங்குவதால் வாந்தி, குமட்டல், தலைசுற்றல், தலைவலி ஆகியவை ஏற்படும். குழந்தைகளின் மூளையைப் பாதிக்கும் நிக்கோடின் அவர்களின் உடல், மன வளர்ச்சியையும் பாதிக்கிறது. ஜிம்பாப்வேயில் கல்வி இலவசம் கிடையாது என்பதால் காசு இருந்தால் மட்டுமே கல்வி சாத்தியம்.

பலரும் புகையிலை விற்று பெறும் பணத்தில்தான் புத்தகமே வாங்கிப்படிக்கிறார்கள். சோற்றுக்கே வழியில்லாதபோது கையுறையும், உடலைக் காக்கும் கோட்டும் வாங்கி அணிவது ஏழை விவசாயிக்கு எப்படி சாத்தியமாகும்? ஆனால் அனைத்தும் விவசாயிக்கு கம்பெனிகள் வழங்கும் அக்ரிமெண்டில் தெளிவாக உள்ளது. அரசுக்கும் கொள்ளையர்களுக்கும் வேறுபாடில்லாத நிலத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்