SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பித்தப்பை கற்களை தடுக்கும் சிறுதானியங்கள்

2018-06-07@ 10:37:24

சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கிறது. பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிகளவு காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதயநோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின்பி3) ரத்ததத்தில் அதிகளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது.

அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோர்க்கு இரண்டாம்வகை அதாவது இனிசுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிகளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன. சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது.
அதிகளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன. உடல்பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும் போது உடல்எடை சீராக குறைகிறது. பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் பைட்டிக்அமிலம் ஆகியவை சிறுதானியங்களில் காணப்படுவதால் சிறுதானியங்களை உட்கொள்வோர்க்கு நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. அதுபோலவே பைட்டேட் புற்றுநோய் வராமல் காக்க உதவுகின்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்