SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்டாம்புகளில் பாமரர்களின் படம்

2018-06-06@ 10:15:10

அஞ்சல்தலைகளில் மகாத்மாகாந்தி, நேரு போன்ற புகழ்பெற்றவர்களின் படங்கள் மட்டுமே பிரின்ட் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சாதாரண மக்களின் புகைப்படங்களையும் ஸ்டாம்ப்களில் பிரசுரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.300 கட்டணம் பெறப்படும். சிறிய அளவிலான புகைப்படம், முகவரி சான்றின் நகல் அளிக்க வேண்டும். அச்சிடப்பட்டதும் நேரில் சென்று பெற்று கொள்ளலாம். அல்லது தனிகட்டணம் செலுத்தினால் அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5 மதிப்பிலான அஞ்சல்தலை 12 வழங்கப்படும். இந்த ‘தன் அஞ்சல் தலை’ ஒரு சிறந்த பரிசுப்பொருளாகவும், பிறந்தநாள், திருமணநாள் நினைவாகவும், தேர்வில் வெற்றி பெற்றதிற்கு பரிசாகவும், பணிஓய்வின் போது நினைவாகவும், சிறந்த சேவை புரிந்தவரை பாராட்டவும் அச்சிட்டு வழங்கலாம்.

வளர்ப்புப்பிராணி, வீடு, நம்மை கவர்ந்த புனிதத்தலங்கள், சுற்றுலாத்தலங்களின் படங்கள் போன்றவற்றையும் அஞ்சல் தலையாக அச்சிடலாம். ஒருவர் அல்லது இருவர் சேர்ந்துள்ள படமும் அச்சிட்டு கொள்ளலாம். இவற்றை வழக்கமான ஸ்டாம்ப்களை போலவே தபால்களில் ஒட்டி பயன்படுத்தி  கொள்ளலாம். ரூ.30 ஆயிரம் மதிப்பிற்கு ஆர்டர் கொடுத்தால் 10சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். மேலும் விபரம் தேவைப்படுபவர்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை  தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்