SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் ஓய்வுபெறும் வயதும், ஓய்வூதிய கணக்கீடும்

2018-06-06@ 10:14:22

ஓய்வுபெறும் வயது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. சிலநாடுகளில் ஓய்வுபெறும் வயது ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் உள்ளது. உதாரணமாக ஆஸ்திரேலியா, பிரேசில், ஏமன், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் 60 மற்றும் 55. ஸ்ரீலங்காவில் 55 மற்றும் 50. ஆனால் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது இருபாலருக்கும் ஒன்றுதான். உதாரணமாக தாய்லாந்து 50. கிரீஸ், பங்களாதேசில் 57, நேபாளம் 58, இத்தாலி 59, பாகிஸ்தான், லகக்ஸம்பர்க், கொரியா, பெல்ஜியம், பராகுவேவில் 60. பிரான்சில் 62, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சிக்கல், டென்மார்க்கில் 65, அமெரிக்காவில் 66, நார்வே, ஐஸ்லாந்து நாடுகளில் 67.
ஓய்வூதியம் வழங்குவதிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பென்சன் பெற (உலகசராசரி) 16ஆண்டுகள் வேலை பார்த்திருக்க வேண்டும். ஆனால் அல்பேனியா நாட்டில் 35 ஆண்டுகள் வேலை பார்த்திருந்தால்தான் பென்சன் கிடைக்கும்.

ஓய்வூதியம் வழங்குவதற்கான கணக்கீடும் மாறுபட்டே இருக்கிறது.
பெல்ஜியத்தில் கடைசி 5 ஆண்டுகளில் ஊதிய சராசரியில் 75 சதவீதம் அளிக்கப்படுகிறது. பிரான்சில் கடைசி 6 மாத ஊதிய சராசரியில் 75 சதவீதம், அயர்லாந்தில் வேலைக்கால முழுவதுமான சம்பள சராசரியில் 50 சதவீதம், சைப்ரசில் கடைசிமாத சம்பளத்தில் சராசரி 67 சதவீதம், மால்டா நாட்டில் கடைசி 10 ஆண்டுகளில் அதிக சம்பளமுள்ள தொடர்ச்சியான 3 ஆண்டுகளில் சராசரியில் 80 சதவீதமும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்