SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-06-05@ 10:02:53

டிரம்ஸ் பெண்கள்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் 315வது ஆண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில், பெண்களின் டிரம்ஸ் குழு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

காக்டெயில் சாதனை

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் இசைத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பிரபல ராப் இசைப்பாடகரான ஸ்னூப் டாக் (வலது) தலைமையில் மிகப்பெரிய கிளாசில் ‘ஜின் - ஜூஸ்’ கலந்த காக்டெயில் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

மாற்றம் தந்த சவிதா

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா, உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாததால் பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு, கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. சவிதா மரணத்தை தொடர்ந்து, இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சட்ட திருத்தம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக 70 சதவீதம் பேர் வாக்களித்ததாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. வாக்குப்பதிவையொட்டி, பல்வேறு இடங்களில் சவிதாவின் உருவப்படத்தை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சொன்னபடி கேளு

ஜெர்மனியின் டுயல்மென் பகுதியில் நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் உரிமையாளரின் உத்தரவுக்கு ஏற்ப, அவரது நாய்கள் உயரத்திற்கு தகுந்தபடி வரிசையாக ஒன்றின் மீது ஒன்று கால் வைத்து அழகாக நிற்கிறது.

பூத்து குலுங்கும் துலீப்

கனடாவில் துலீப் மலர் சீசன் தொடங்கியுள்ளது. கியூபெக்கின் லாவல் பகுதி தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் துலீப் மலர்களுக்கு இடையே அன்பை பரிமாறிக் கொள்ளும் காதல் ஜோடி.

டிரைவர் இல்லாத கார்

டிரைவர் இல்லாமல் தாமாக இயங்கக் கூடிய வாடகை கார்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோங்க்குயிங் மாகாணத்தில் ஒரு மாத சோதனை அடிப்படையில் இந்த வகை நவீன கார்கள் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. செல்போனில் வாடகை கார்களை புக் செய்வது போன்று இக்கார்களை வாடகைக்கு எடுக்கலாம். சிக்னல், டிராபிக் ஜாம், இரவு, பகல், மழை என சூழ்நிலைக்கு ஏற்ப காரே தாமாக நின்று, மெதுவாக செல்லும். விளக்குகளை போட்டுக் கொள்ளும். இந்த ஆண்டு இறுதிக்குள், இதுபோன்ற 100 கார்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்