SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2018-06-01@ 09:56:00

அடுத்த மாதம் த்ரில் பாலம் திறப்பு

சீனாவின் குளோங்ஜியா மலைப் பிரதேசத்தில் ரூ.300 கோடி செலவில் த்ரில்லான கண்ணாடி பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. மலையின் நுனிப் பகுதியிலிருந்து 236 அடி தூரத்திற்கு இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலம் வழியாக சென்றால், 663 அடி உயரத்தில் மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் நிற்பது போன்ற உணர்வுடன் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இப்பாலம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.

மீன் பிடிப்பதில் புதிய சாதனை


அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்தில் உள்ள மிசோரி ஆற்றில், வெறித்த கண்களுடன் கூடிய வால்ஐ வகையைச் சேர்ந்த பெரிய மீனைப்பிடித்து நீல் லெயர் சாதனை படைத்துள்ளார். இந்த மீன் 32.5 இன்ச் நீளமும், சுமார் 6.5 கிலோ எடையும் கொண்டது. கடந்த 60 ஆண்டில் அம்மாகாணத்தில் தூண்டில் மூலம் பிடிபட்ட மிக கனமான மீன் இதுவே.

கடன் கட்டாதவர்களுக்கு புதுவிதமான நெருக்கடி

சீனாவின் ஹிஜியாங் நகரின் உள்ளூர் நீதிமன்றம் கடன் பாக்கி வழக்குகளில் புதுவிதமான தண்டனை விதித்துள்ளது. கடனை திருப்பி செலுத்தாதவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களின் புகைப்படம், விவரங்களை தியேட்டர்களில் திரையிட உத்தரவிட்டது. அதன்படி, 26 பேரின் புகைப்படங்கள், விவரம் நாள்தோறும் 30 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அதோடு கடன் பாக்கி வைக்காதீர்கள் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு விளம்பரமும் திரையிடப்படுகிறது.

வாத்து குஞ்சுகளை தத்தெடுத்த நாய்


இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் மாகாணம் மவுண்ட்பிட்செட் கேசில் நகரைச் சேர்ந்த வீட்டு நாய் பிரெட். வயது 10. வீட்டின் அருகே சில நாட்களுக்கு முன்பு 9 வாத்து குஞ்சுகள் அநாதையாக கிடந்தன. அதன் தாய் வாத்து காணாமல் போயிருந்தது. ஆதரவின்றி கிடந்த வாத்து குஞ்சுகளை தத்தெடுத்த பிரெட், அவற்றை பாசத்துடன் பராமரித்து வருகிறது. பிரெட்டின் உரிமையாளர், வாத்து குஞ்சுகளை தனது தோட்டத்தில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவற்றை பிரெட் நன்றாக கவனித்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

களை கட்டிய பன் திருவிழா


ஹாங்காங்கின் சேங் சா தீவில் ஆண்டுதோறும் நடக்கும் பன் திருவிழா மிகப்பிரபலமானது. இந்தாண்டு இத்திருவிழா கடந்த 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. பல்வேறு சாகச நிகழ்ச்சிகளுடன், விழாவின் முக்கிய அம்சமான பன் பறிக்கும் விழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். இதில், உயரமான கோபுரத்தில் கட்டப்பட்ட பன்களை அதிக அளவில் பறிக்கும் அணிக்கு பரிசு வழங்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்