விமான பாகம் வாங்க 17.55 கோடி லஞ்சம் பாதுகாப்பு துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு ராகுல் கோரிக்கை
2018-06-01@ 00:23:56

புதுடெல்லி: ‘விமான பாகம் கொள்முதலுக்காக உக்ரைனிடம் 17.55 கோடி லஞ்சம் வாங்கிய மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து ஏஎன் 32 என்ற விமானத்தின் பாகங்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக உக்ரைன் அரசிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், `பாஜ பாதுகாப்புத் துறை ஊழல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
ஏஎன் 32 ரக விமான பாகங்களை கொள்முதல் செய்வதற்காக மோடி அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உக்ரைன் அரசிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை துபாய் உதவியுடன் லஞ்சமாக பெற்றுள்ளதாக செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, மோடி அவர்களே... நீங்கள் தலையிட்டு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது: அருண் ஜெட்லி
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து உயர்நீதிமன்றத்தை அணுக ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு: ஸ்டெர்லைட் சி.இ.ஓ. ராம்நாத் தகவல்
மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படை அதிரடி
4ஜி சேவை உரிமம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தம்
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை..... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்