ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை
2018-05-31@ 10:46:43

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் நீர்தேக்கம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் 216 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் திருப்பத்தூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நீர்தேக்கத்தை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான நிதியாக ரூ.1 கோடியே 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பும் வெளியானது.
ஆனால் தற்போது வரை ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் சுற்றுலாத்தலமாக மாற்றப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. ஆண்டியப்பனூர் நீர்தேக்கம் செல்ல பெரும்பாலும் தனியார் வாகனங்களையே நம்பி இருப்பதால், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்தை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரியுள்ளனர். மேலும் இந்த பகுதியில் கழிவறை வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அடுத்த கோடை காலத்திற்குள் ஆண்டியப்பனூர் நீர்தேக்கத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
கரையும் காரைகள்... விரிவடையும் விரிசல்கள்... பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் சிகிச்சை பெறும் பாலகர்கள்
திண்டிவனம் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அக்னிதீர்த்த கடலில் மலரஞ்சலி
கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் பயன்பாட்டிற்கு வரும் முன்பே ‘டாப் எகிறியது’
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி