SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்வு

2018-05-31@ 10:31:10

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 259.37 புள்ளிகளாக சரிந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.06 புள்ளிகள் உயர்ந்து 35,152.17 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61.75 புள்ளிகள் அதிகரித்து 10,676.10 புள்ளிகளாக உள்ளது.

கோல் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, பார்தி ஏர்டெல், HUL, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, கோடக் வங்கி, எச்டிஎப்சி லிமிடெட், என்.டி.பி.சி, விப்ரோ, ஆர்ஐஎல், இன்ஃபோசிஸ் மற்றும் எம் & எம் போன்ற நிறுவன பங்குகள் விலை 2.81% வரை உயர்ந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 1.20%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.95% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.60% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 1.26% வரை அதிகரித்து முடிந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்