SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

16 நாளில் 4 ரூபாய் அதிகரித்து விட்டு பெட்ரோல், டீசல் 1 காசு குறைப்பு

2018-05-31@ 01:58:04

* 60 பைசா குறைத்துவிட்டு உடனே வாபஸ்
*. தவறாக பதிவாகி விட்டதாக விளக்கம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 60 காசு குறைக்கப்பட்டதாக நேற்று காலை அறிவிப்பு வெளியானது. ஆனால், அது தவறுதலாக பதிவாகிவிட்டதாக விளக்கம் அளித்த எண்ணெய் நிறுவனங்கள், ஒரு பைசா மட்டுமே குறைத்தன.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்கின்றன. தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், கர்நாடக தேர்தலுக்காக கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை 19 நாட்களுக்கு விலை உயர்வை நிறுத்தி வைத்தன.

 கச்சா எண்ணெய் விலை உயர்ந்த வந்தபோதும், தேர்தலுக்காக விலை உயர்வை நிறுத்தி வைத்த நிறுவனங்கள், தேர்தல் முடிந்து 2வது நாளே விலையை அதிகரிக்க தொடங்கின. நேற்று முன்தினம் வரை டீசல் விலை சென்னையில் ரூ.3.62, டெல்லியில் ரூ.3.38 உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை சென்னையில் ரூ.4ம், டெல்லியில் ரூ.3.80ம் அதிகரிக்கப்பட்டது.   நேற்று காலை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை 60 காசு குறைத்திருப்பதாக அறிவித்தன. ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே ஒரு பைசா மட்டுமே குறைக்கப்பட்டுள்ளாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி அளித்த விளக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை தலா ஒரு காசு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. தவறுதலாக கடந்த 25ம் தேதிக்கான விலை பதிவாகிவிட்டது. இதனால்தான் 60 காசு குறைந்தது. இது தவறுதலாக குறிப்பிடப்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.

  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதோடு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் வலுவடைந்துள்ளது. எனவே வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்றார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கலால் வரி 2 ரூபாய் குறைத்தால் ஆண்டுக்கு ரூ.13,000 கோடி வருவாய் குறைவதாக மத்திய அரசு கூறி வருகிறது.

ஆனால், மாநில அரசுகள்தான் வாட் வரியை குறைக்க வேண்டும் என கூறி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிரந்தரமான நீண்டகால தீர்வு காண உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒரே இரவில் விலையை குறைத்துவிட முடியாது. சில நாட்களுக்கு விலை உயர்வு நீடிக்கத்தான் செய்யும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் குறைத்த விலையை தவறுதலாக பதிவிட்டதாக கூறி வாபஸ் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்