SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மா அணி பெயர் மாறுகிறது : மன்னார்குடியில் ஜூன் 10ம் தேதி திவாகரன் புதுக்கட்சி தொடக்கம்

2018-05-31@ 01:28:18

மன்னார்குடி: மன்னார்குடியில் ஜூன் 10ம் தேதி திவாகரன் புதிய பெயரில் கட்சி துவங்குகிறார். புதிய கொடியையும்  அறிமுகம் செய்கிறார். அமமுக என்ற பெயரில் டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கியதை தொடர்ந்து அவருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து திவாகரன் அம்மா அணி என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கினார். அப்போது, அமமுகவிற்கும் தனக்கும் இனி எவ்வித தொடர்பும் இல்லை என்று திவாகரன் கூறினார். மேலும், அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில், தற்போது கட்சிக்கு அம்மா அணி என்ற வாசகம் இடம்பெறும் வகையில் புதிய பெயர் வைக்கவும், புதிய கொடியை அறிமுகம் செய்யவும் திவாகரன் முடிவு செய்துள்ளார். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடியின் நடுவில் பச்சை நிறத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும் வகையில் கட்சியின் கொடி உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கட்சியின் துவக்க விழா வரும் 10ம் தேதி மன்னார்குடி 3வது தெருவில் இருக்கும் அம்மா அணி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்