SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை பயிற்சி ஆட்டம் ஹைதியை பந்தாடியது அர்ஜென்டினா: மெஸ்ஸி ஹாட்ரிக் அசத்தல்

2018-05-31@ 00:47:00

பியூனஸ் அரிஸ்: ஹைதி அணியுடனான பிபா உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா உலக கோப்பை தொடர், ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. இன்னும் 2 வார அவகாசமே உள்ள நிலையில், இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 32 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 108வது இடத்தில் உள்ள ஹைதி அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு, கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து 3-0 என முன்னிலை கொடுத்தார். கடைசி கட்டத்தில் செர்ஜியோ ஆகுவரோ மேலும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது.

‘இந்த போட்டியின் முடிவை விட, எங்கள் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்று மிகுந்த நம்பிக்கையுடன் ரஷ்யா செல்கிறோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தகுதிச்சுற்றில் நாங்கள் சற்று தடுமாற்றத்துடன் விளையாடியதால், கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாக செல்லவில்லை. எனினும், சிறப்பாக பயிற்சி செய்து தயாராகி உள்ளோம். சாம்பியன் பட்டம் வெல்ல முழு மூச்சுடன் விளையாடி திறமையை வெளிப்படுத்துவோம்’ என்று மெஸ்ஸி கூறியுள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பயிற்சி மேற்கொள்ளும் அர்ஜென்டினா அணி, உலக கோப்பை டி பிரிவில் ஜூன் 16ம் தேதி ஐஸ்லாந்து அணியை சந்திக்கிறது. அடுத்து குரோஷியாவுடன் 21ம் தேதியும், கடைசி லீக் ஆட்டத்தில் நைஜீரியாவுடன் 26ம் தேதியும் மோதுகிறது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்