SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம்: நாளை நள்ளிரவு தொடங்குகிறது

2018-05-30@ 20:11:02

குளச்சல்: குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு 60 நாள் மீன் பிடி தடை காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்குகிறது. குளச்சல் கடற்பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற வகை மீன்கள் கிடைக்கிறது. இந்த மீன் வகைகளுக்கு வெளிநாட்டில் நல்ல மவுசு உள்ளது.

ஆகவே விசைப்படகினர் இது போன்ற உயர் ரக மீன்களை பிடிப்பதில் தனி ஆர்வம் காட்டுவார்கள். ஆண்டுதோறும் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் விசைப்படகு களுக்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்து உள்ளது. இந்த தடை காலம் குமரி மாவட்டத்தில் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதிக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ம் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிக்கு ஜூன் 1 முதல், ஜூலை 31 தேதி வரையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கிழக்கு கடற்கரையில் இந்த தடை காலம் அமலில் இருந்து வருகிறது. ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு முதல் இந்த தடை நீங்குகிறது.

இதையடுத்து மேற்கு கடற்கரை பகுதியில் வரும் ஜூன் 1 ம் தேதி (நாளை மறுநாள்) முதல் தடை காலம் தொடங்குகிறது. கோவளம், மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், மணவாளக்குறிச்சி, குளச்சல், குறும்பனை, கொல்லங்கோடு, நீரோடி, நித்திரவிளை ஆகிய கடலோர கிராமங்கள் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ளது. இங்கு வரும் ஜூன் 1ம் தேதி  முதல் 2 மாதங்கள் தடை காலம் அமலில் இருக்கும். நாளை நள்ளிரவு முதல் குமரி மேற்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் தொடங்குகிறது. இதனால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி உள்ளது. அவை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த தடைக்காலத்தில் விசைப்படகினர் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தென் அரபிக்கடலோர பகுதியில் சூறைக்காற்று காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் மீன்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் விசைப்படகுகளுக்கு 60 நாள் தடைக்காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்குவதால் மேலும் மீன் வரத்து குறையும் என மீன் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்