SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 21 அரசுடைமை வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

2018-05-30@ 18:52:54

இந்தூர்: கடந்த ஆண்டில் 21 அரசு வங்கிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர்  2017-18-ம் ஆண்டில் அரசு வங்கிகளுக்கு வங்கி மோசடி மூலம் ஏற்பட்ட இழப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவுக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரத்தை  தெரிவித்துள்ளது.

இது குறித்து சந்திரசேகர் கூறியதாவது:
கடந்த 2017-18ம் நிதியாண்டில் 21 அரசு வங்கிகளுக்கு மோசடி மூலம்  ரூ.25 ஆயிரத்து 775 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.6 ஆயிரத்து 461.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 390.75கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.2 ஆயிரத்து 224.86 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.ஆயிரத்து 928.25 கோடியும், அலஹாபாத் வங்கிக்கு ரூ.ஆயிரத்து 520.37 கோடியும், ஆந்திரா வங்கிக்கு ரூ. ஆயிரத்து 303.30 கோடியும், யூசிஓ வங்கிக்கு ரூ.ஆயிரத்து 224.64 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கிக்கு மோசடி மூலம் ரூ.ஆயிரத்து116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 95.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. ஆயிரத்து 84.50 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிராவுக்கு ரூ.ஆயிரத்து 29.23 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.ஆயிரத்து15. 79 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர கார்பரேஷன் வங்கிக்கு ரூ.970.89 கோடியும், யூனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.880.53 கோடியும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக்கு ரூ.650.28 கோடியும், சின்டிகேட் வங்கிக்கு ரூ.455.05 கோடியும் மோசடியால் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மோசடி காரணமாக கனரா வங்கிக்கு ரூ.190.77 கோடியும், சிந்த் வங்கிக்கு ரூ.90.01 கோடியும், தீனா வங்கிக்கு ரூ.89.25 கோடியும், விஜயா வங்கிக்கு ரூ.28.58 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.24.23 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை மோசடிகள் நடந்துள்ளன, எந்த வங்கியில் அதிகபட்சமாக மோசடிகள் நடந்துள்ளன என்பது குறித்து ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

  • Chicagohospitalkill

    அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் வாலிபர் துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி

  • MahanathiBridgeAccident

    ஒடிசாவில் ஆற்றுப் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்