SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு பிறகு குறைப்பு !

2018-05-30@ 08:17:22

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் 63 காசும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்றே குறைத்து விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் விலை, கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து 19 நாட்களுக்கு விலை உயர்வை நிறுத்தி வைத்தது. பின்னர் கடந்த 14ம் தேதி முதல் லிட்டருக்கு சராசரியாக 25 முதல் 30 பைசா வீதம் உயர்த்தி வந்தது.

நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசு உயர்ந்து ரூ81.26ஆகவும், டெல்லியில் 15 காசு உயர்ந்து ரூ78.27ஆகவும் இருந்தது. கடந்த 15 நாட்களில் சென்னையில் பெட்ரோல் ரூ3.83ம், டெல்லியில் ரூ3.64ம் உயர்ந்தது. டீசல் விலை சென்னையில் நேற்று 11 காசு அதிகரித்து ரூ73.03ஆகியது. டெல்லியில் 12 காசு உயர்ந்து ரூ69.17 ஆகியது. 15 நாட்களில் டீசல் விலை சென்னையில் ரூ3.47ம், டெல்லியில் ரூ3.24ம் அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், முதல்கட்டமாக விமான பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நீண்ட கால அடிப்படையில் சிறந்த உத்தி வகுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் 63 காசும், டீசல் விலை லிட்டருக்கு 60 காசும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்றே குறைத்து விற்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ80.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.58-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இதனிடையே டெல்லியில் பெட்ரோல் விலை 60 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 77.83 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 56 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 68.75 காசுகளுக்கு விற்கப்படுகிறது.மேலும் மும்பை  பெட்ரோல் விலை 59 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 85.65 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 59 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ. 73.20 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்