SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடகை தனி மாநிலமாக்கினால் தமிழகத்துக்கு காவிரி நீர் தருவோம் : பழங்குடி மக்கள் அறிவிப்பு

2018-05-30@ 01:39:31

கும்பகோணம்: குடகு பகுதியை தனி மாநிலமாக்கினால் தமிழகத்துக்கு காவிரி நீர் தருவோம் என்று குடகு பழங்குடி மக்கள் பயண ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து பூம்புகார் வரை காவிரி உயிர் நீரோட்ட காப்பு பயணம் மேற்கொள்ளும் குடகு தேசிய குழுவினர் தஞ்சைக்கு நேற்று முன்தினம் வந்தனர். இதைதொடர்ந்து தஞ்சையிலிருந்து கும்பகோணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். கும்பகோணத்தில், கர்நாடகா மாநிலம்  குடகு பழங்குடி மக்கள் பயண ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தற்போது காவிரி ஆறு பாலைவனமாக மாறிவிட்டது. குடகு பகுதியில் காவிரி உருவாகிறது. அங்குதான் 180 டிஎம்சி தண்ணீர் வெளியேறுகிறது.  கர்நாடகா அரசு அப்பகுதியில் 2 அணைகளை கட்டி கொண்டு தண்ணீரை தேக்கி வைத்து எங்களுக்கே தண்ணீர் தர மறுக்கிறது. நாங்கள் ஆழ்குழாய் போர் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியான குடகு பகுதியை தனி மாநிலமாகவும் அல்லது புதுச்சேரிபோல் தனி அந்தஸ்து கொண்ட மாநிலமாக அறிவித்தால் தமிழகத்துக்கு தண்ணீர் தருவோம். கர்நாடக அரசு எங்கள் மக்களை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு மணி கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்