SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி : 4 ஸ்பின்னர்களுடன் வருகிறது ஆப்கானிஸ்தான்

2018-05-30@ 00:39:27

புதுடெல்லி: இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க தொடக்க டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ஆப்கானிஸ்தான் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் உட்பட 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதும் தொடக்க  டெஸ்ட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14ம் தேதி  தொடங்குகிறது.

இப்போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அஸ்கர் ஸ்டானிக்சாய் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம்  பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் அசத்திய 18 வயது இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், முஜீப் உர் ரகுமான் (17 வயது) மற்றும் ஜாகிர் கான், ஆமிர்  ஹம்சா ஹோட்டக் என 4 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ரஷித் கான் மட்டுமே 4 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில்  விளையாடிய அனுபவம் உள்ளவர். பேட்டிங் வரிசையில் கேப்டன் ஸ்டானிக்சாய், தொடக்க வீரர் முகமது ஷாஷத், ஆல் ரவுண்டர் முகமது நபி  ஆகியோர் இந்திய பந்துவீச்சுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப் பந்துவீச்சாளர் தவ்லத் ஸத்ரன் காயம் காரணமாக விலகியது,  ஆப்கானிஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது.

உலகின் தலைசிறந்த டி20 பவுலர் என சச்சின் டெண்டுல்கரால் பாராட்டப்பட்டுள்ள ரஷித் கான், ஐபிஎல் அனுபவம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்  போட்டியில் தனக்கு கை கொடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனாகவும் திறமையை வெளிப்படுத்தியுள்ள அவரது ஆட்டம்,  தொடக்க டெஸ்ட் போட்டியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: அஸ்கர்  ஸ்டானிக்சாய் (கேப்டன்), முகமது ஷாஷத், ஜாவேத் அகமதி, ரகமத் ஷா, இஷானுல்லா ஜனத், நசீர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷாகிதி, அப்சர் ஸஸாய்,  முகமது நபி, ரஷித் கான், ஜாகிர் கான், ஆமிர் ஹம்சா ஹோட்டக், சயீத் அகமது ஷிர்ஸத், யாமின் அகமத்ஸாய் வாபதார், முஜீப் உர் ரகுமான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்