SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாநில அளவிலான த்ரோபால் போட்டி : சென்னையில் வீரர்கள் தேர்வு முகாம்

2018-05-30@ 00:38:36

சென்னை: மாநில அளவிலான த்ரோபால் போட்டிகளில் பங்கேற்பதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம் ஜூன் 2ம் தேதி நடைபெற உள்ளது.
இது  குறித்து  சென்னை மாவட்ட த்ரோபால் சங்கத்தின் தலைவர் பால விநாயகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் ஜூன் 19ம்  தேதி முதல் 21ம் தேதி வரை 16வது மாநில அளவிலான ஜூனியர் த்ரோபால் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. சிறுவர், சிறுமியர் பிரிவுகளில்  நடைபெறும் இந்தப் போட்டியில் மாவட்டவாரியாக  அணிகள் பங்கேற்கும்.

சென்னை மாவட்ட சிறுவர், சிறுமியர் அணிகளை தேர்வு செய்வதற்கான தேர்வு முகாம் ஜூன் 2ம் தேதி நடைபெறும். சென்னை நேரு  விளையாட்டரங்கில்  காலை 8 மணிக்கு முகாம் தொடங்கும். தகுதி உள்ள, 19 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள்  உரிய ஆவணங்களுடன்  பங்கேற்கலாம். மேலும் விவரங்கள் அறிய, பதிவு செய்ய  98410 25254, 94440 40970 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்