SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரத்து அதிகரிப்பால் வெள்ளைப்பூண்டு கிலோ ரூ20க்கு விற்பனை

2018-05-29@ 01:41:10

கோவில்பட்டி : கோவில்பட்டி மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு விலை பாதியாக சரிந்து, கிலோ ரூ20க்கு விற்கப்பட்டது. மத்திய  பிரதேச மாநிலத்தில் நடப்பாண்டில் வெள்ளைப்பூண்டு விளைச்சல் அமோகமாக  உள்ளது. இவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்த பெங்களூரு பகுதி வியாபாரிகள்  குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். இதையடுத்து அங்கு சென்று கொள்முதல்  செய்த வெள்ளைப்பூண்டுகளை கோவில்பட்டி வியாபாரிகள் நகராட்சி தினசரி  மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

வரத்து  அதிகரிப்பால் வெள்ளைப்பூண்டு விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு கிலோ ரூ40க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளைப்பூண்டு, தற்போது கிலோ  ரூ20க்கு விற்கப்படுகிறது. பாதி விலைக்கு கிடைப்பதால், வெள்ளை பூண்டுகளை  சிறு கடை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் கிலோ கணக்கில்  வாங்கிச்சென்றனர். இதனிடையே நகர வீதிகளில் லோடு வேன்களில் வைத்து  வெள்ளைப்பூண்டுகளை வியாபாரிகள் கூவிக்கூவி விற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்