SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனுஷ்கோடியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் : பாம்பன் பாலம் அருகே ரயில் நிறுத்தம்

2018-05-29@ 00:31:13

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பலத்த காற்றுடன் கொந்தளிப்பதால் பாம்பன், தனுஷ்கோடி தென்கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. சிக்னல் கிடைக்காததால் திருச்சி - ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் பாம்பன் பாலம் அருகில் நிறுத்தப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த காற்று வீசுவதோடு, கொந்தளிப்பாகவும் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி மற்றும் பாம்பன் தென்கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி கரையோரத்தில் 20 அடி உயரத்திற்கு மேல், கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. கோடை விடுமுறை என்பதால் தனுஷ்கோடிக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்த பாசஞ்சர் ரயில், பகல் 12.15 மணியளவில் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட்டபோது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பாம்பன் ரயில் பாலத்திற்கு முன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்ததும் 30 நிமிடம் தாமதமாக பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்