SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றில் நவோமி ஒசாகா; அசரென்கா அதிர்ச்சி தோல்வி

2018-05-29@ 00:22:39

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, ஜப்பான் வீராங்கனை நவோமி  ஒசாகா தகுதி பெற்றார். முதல் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனினுடன் (95வது ரேங்க்) நேற்று மோதிய ஒசாகா (20வது ரேங்க்) 6-2 என்ற  கணக்கில் முதல் செட்டை எளிதாகக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் சோபியா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், அவரது  சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஒசாகா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) 5-7, 5-7 என்ற நேர் செட்களில் கேத்தரினா  சினியகோவாவிடம் (54வது ரேங்க், செக்.) போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். அசரென்கா ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன்  களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெலினா ஓஸ்டபென்கோ (லாட்வியா), அமெரிக்க நட்சத்திரம் வீனஸ்  வில்லியம்ஸ் இருவரும் முதல் சுற்றுடன் வெளியேறி உள்ள நிலையில், செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தனது முதல் சுற்றில் 3-6, 6-1, 7-5  என்ற செட் கணக்கில் பராகுவேவின் செப்பட் ராய்கை 3 செட்களில் போராடி வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் மேடிசன் கீஸ் (அமெரிக்கா), கர்லா சுவாரெஸ் நவர்ரோ (ஸ்பெயின்), டாரியா கசட்கினா (ரஷ்யா), மரியா சக்கரி (கிரீஸ்)  ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் நம்பர் 1 வீரர்  நோவாக் ஜோகோவிச் (22வது ரேங்க்) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் துத்ரா சில்வாவை (பிரேசில்) வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் சுவிஸ்  நட்சத்திரம் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 2-6, 6-3, 6-4, 6-7 (5-7), 3-6 என 5 செட்களில் ஸ்பெயினின் கார்சியா லோபஸிடம் மூன்றரை மணி நேரம்  போராடி தோற்றார். டொமினிக் தீம் (ஆஸ்திரியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்