SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

2019 மக்களவை தேர்தலில் பாஜ தோற்கும்: சந்திரபாபு நாயுடு உறுதி

2018-05-28@ 21:46:37

விஜயவாடா: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ தோல்வியை சந்திக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு கூறினார். தெலுங்குதேசம் கட்சியின் வருடாந்திர மாநாடு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபுநாயுடு பேசியதாவது: 2019ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜ தோல்வியை சந்திக்கும். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரப்போவதாக கனவு காண்கிறார். ஆனால் அது நடக்காது.  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கடந்த 4 ஆண்டுகளில் பாஜ நிறைவேற்றவில்லை.

எதிர்கட்சியாக உள்ள காங்கிரசாலும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாது. கடந்த 1996ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது தெலுங்குதேசம். அதே போன்று வருகிற 2019ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைய தெலுங்குதேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். பாஜவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து அடுத்த மக்களவை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து தான் பணமதிப்பிழப்பு பிரச்சினையில் நாங்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் மத்திய அரசால் வங்கிகள் திவாலாகி உள்ளது. வங்கி அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். சரக்கு சேவை வரியை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்து உள்ளது. இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்