SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'அங்கிள்ஸ் அணி' என்ற கிண்டலுக்கு தக்க பதிலடி கொடுத்து அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

2018-05-28@ 12:34:09

மும்பை: அங்கிள்ஸ் அணி என்று கிண்டலிக்கப்பட்ட சென்னை அணி, 11வது ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் வென்று சென்னை ரசிகர்களை பரவசமடைய செய்துள்ளனர் தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணி 11வது முறையாக நடக்கும் ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு இது 9வது தொடராகும். பங்கேற்ற எல்லா ஐ.பி.எல். போட்டிகளிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்கிற பெருமையை தன்வசமே வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐ.பி.எல் தொடரில் சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சூதாட்ட புகாரின் காரணமாக கடந்த 2 ஐ.பி.எல் தொடர்களில் சென்னை அணி விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடைக்காலம் முடிந்து மீண்டும் சென்னை அணி களமிறங்கியபோது சென்னை அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது சென்னை அணியில் விளையாடிய வீரர்களின் சராசரி வயதாகும். இந்த ஆண்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான ஏலம் முடிந்தபோது சென்னை அணியில் அதிக எண்ணிக்கையிலான மூத்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அணியின் கேப்டன் தோனி, முக்கிய வீரர்களான ரெய்னா, அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், ஹர்பஜன் சிங் என எல்லா வீரர்களும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தனர். இதனை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் சென்னை அணி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இளம் வீரர்களுக்கான போட்டி என்று கருதப்படும் 20 ஓவர் போட்டிகளில் மூத்த வீரர்கள் எப்படி ஜொலிப்பார்கள் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.

ஆனால் சென்னை அணி தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் அசத்தியது. சென்னை அணியின் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். தொடர் ஆரம்பித்ததில் இருந்து சென்னை அணி தொடர்ந்து முதல் 4 இடங்களிலேயே நீடித்தது. லீக் போட்டிகளில் 9 வெற்றிகளோடு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, எந்த விதத்திலும் எதிரணியினருக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் சாம்பியனாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வாட்சன் தான் இறுதிப்போட்டியின் கதாநாயகனாக மாறியுள்ளார். 20 ஓவர் போட்டி இளைஞர்களுக்கானது என்ற பிம்பத்தை உடைத்து அனுபவ வீரர்களாளும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளது அங்கிள்ஸ் அணி என்று வர்ணிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்