SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திப்பு

2018-05-28@ 08:57:35

பெங்களூரு : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்தானதால், கர்நாடகாவில் இன்று நடைபெற இருந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துறைகளை பங்கிடுவதில் கூட்டணி கட்சிகளான ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருகட்சிகளிடையே அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்துள்ளதால் குமாரசாமிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்த குமாரசாமி நேற்று டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குமாரசாமியை சந்திக்காமலேயே ராகுல் காந்தி அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இதனை தொடந்து குமாரசாமி இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மோடியை முதன்முதலாக சந்திக்கும் குமாரசாமி, கர்நாடகா திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மோடியை சந்திக்க இன்று மாலை குமாரசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sikhs_str11

    சீக்கியர்களின் திருநாளான குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மத ஊர்வலத்தில் மாணவர்கள் ஆயத்தம்

  • 9thday_thiru1

    கார்த்திகை தீபத்திருவிழாவின் 9ம் நாள் : விநாயகர் முஷிக வாகனத்திலும் சந்திரசேகரர் புருஷாமுனி வாகனத்திலும் வீதி உலா

  • saalai_mari111

    குடிநீர், மின்சாரம் கேட்டு கூத்தாநல்லூர் அருகே மக்கள் சாலை மறியல்

  • kajaa_puyal123a

    கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளில் ஆளுநர் ஆய்வு : மக்கள் குறைகளை கேட்டு ஆறுதல் கூறினார்

  • kaarthigai_8mday1

    தி. மலை கார்த்திகை தீபத்திருவிழா : 8ம் நாளில் சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்