SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் : 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

2018-05-28@ 00:29:25

லண்டன் : இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு சுருண்டது (58.2 ஓவர்). அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 363 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 179 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 66 ரன், டொமினிக் பெஸ் 55 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பட்லர் 67 ரன், பெஸ் 57 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மார்க் வுட் 4 ரன்னில் வெளியேற, ஸ்டூவர்ட் பிராடு டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இங்கிலாந்து 7 ரன்னுக்கு கடைசி 4 விக்கெட்டை பறிகொடுத்து 242 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது ஆமிர், முகமது அப்பாஸ் தலா 4, ஷதாப் கான் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 64 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 12.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன் எடுத்து அபாரமாக வென்றது. அஸார் அலி 4 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் கிளீன் போல்டானார். இமாம் உல் ஹக் 18 ரன், ஹாரிஸ் சோகைல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2 இன்னிங்சிலும் தலா 4 விக்கெட் கைப்பற்றிய முகமது அப்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 5ம் தேதி தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்