SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹெலிகாப்டர் போல் தரையிறங்கும் நவீன விமானம் தயாரிக்க ஐஐடி கான்பூர் ஒப்பந்தம்

2018-05-28@ 00:17:27

கான்பூர் : ஹெலிகாப்டர் போல் தரையிறங்கி, ஏறும் விடிஓஎல் விமானத்தின் மாதிரியை உருவாக்க ஐஐடி-கான்பூர் ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஹெலிகாப்டர் போல் செங்குத்தாக தரையிறங்கி, ஏறி பறக்கும் விமானத்தை உருவாக்குவதற்கான புரிந்துணைர்வு ஒப்பந்தந்தை விடிஓஎல் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஐஐடி-கான்பூர் சில மாதங்களுக்கு முன்பு செய்து கொண்டது. இது குறித்து ஐஐடி-கான்பூர் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் விமான ஆய்வுக்கூட தலைவர் அஜய் கோஷ் கூறியதாவது: விடிஓஎல் விமானம் உருவாக்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். மேக் இன் இந்தியா திட்டத்தில் இது முக்கிய மைல் கல்லாக இருக்கும். இத்திட்டத்திற்கான ஆய்வை மேற்கொள்வதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மிகவும் சவாலான பணி. எந்தவிதமான தரைப் பகுதியிலும் இயக்கக்கூடிய இந்த வகை விமானத்தை உருவாக்குவது  புரட்சிகரமானதாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதத்திலும் இருக்கும். இந்த வகை விமானம் போர் மற்றும் மீட்பு பணிக்கு மிகச் சிறந்தது. கண்காணிப்பு பணி மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும் இந்த விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முக்கிய நகரங்களில் ஏற்படும் விமான போக்குவரத்து நெரிசல் பிரச்னை தீரப்பதற்கான அம்சங்கள் விடிஓஎல் வகை விமானத்தில் உள்ளது. பைலட்டுடனும், பைலட் இல்லாமலும் இந்த வகை விமானத்தை இயக்க முடியும். பல நாட்டு ராணுவங்கள் இந்த வகை விமானத்தை படையில் சேர்ப்பது பற்றி கவனம் செலுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்