SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

2018-05-27@ 17:56:01

புதுடெல்லி: காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு, காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். காஷ்மீரில் அரசுக்கு எதிராக பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அடிக்கடி நடக்கும் கல்வீச்சு சம்பவங்கள், கடையடைப்பு போராட்டங்கள் போன்றவற்றுக்கு பிரிவினைவாத அமைப்புகள் காரணமாக உள்ளன. இதனால் காஷ்மீரில் எப்போதும் அசாதாரண சூழலே நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு பிரிவினைவாத தலைவர்களுடன் எப்போது வேண்டுமானால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீரின்  பிரச்னைகள் தொடர்பாக, மத்திய அரசின் சிறப்பு பிரதிநிதி பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.  காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பலமுறை முயற்சிகளை மேற்கொண்டது. காஷ்மீரை பிரச்னைக்குரிய பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென பிரிவினைவாதிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மத்திய அரசின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ராஜ்நாத் சிங் தற்போது கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்