SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலவேம்பு, நொச்சி திட்டம் முடங்கியது வைரஸ் காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு

2018-05-27@ 02:04:58

கோவை : வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம், நொச்சி செடி வளர்க்கும் திட்டங்கள் கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக மீண்டும் தொடங்க சுகாதார துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கும் திட்டம் கடந்த 3 ஆண்டாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் சுகாதார துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டத்தை முடக்கி விட்டது. நொச்சி செடிகள் மூலமாக வைரஸ் காய்ச்சல் தடுக்க முடியும். மாநில அளவில் சுகாதார துறை, உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் 385 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், 12,651 கிராமங்களில் வீடுகளில் வளர்க்கும் வகையில் நொச்சி செடிகளை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 1 கோடி நொச்சி செடி வழங்கும் திட்டம் துவக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை அறிவித்தது.  நொச்சி இலைகளை வெது வெதுப்பான நீரில் போட்டு குளித்தால் மூட்டு வலி இருக்காது. காய்ச்சல் உள்ளவர்கள் இந்த இலை போட்ட நீரில் குளித்தால் நிவாரணம் பெற முடியும் என்ற நிலையிருந்தது. நொச்சி இலையில் கரோட்டின், வைட்டமின், குளுக்கோசைடு சத்து உள்ளது. எளிதில் கிடைக்கும் பாதுகாப்பான மூலிகை தாவரமாக இருப்பதால், இதை கிராமங்களில் பரவலாக வினியோகிக்க உள்ளாட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இதை பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் கிடப்பில் போட்டுவிட்டது. டெங்கு காய்ச்சலை ெதாடர்ந்து நிபா வைரஸ் பீதியை கிளப்பி வருவதால், நொச்சி செடி திட்டத்தை மீண்டும் அறிவிக்க சுகாதார துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்