காவிரி பிரச்னையில் நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு 6 மாத சிறை தண்டனை : கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2018-05-27@ 01:45:20

பெங்களூரு : காவிரி நீர் பங்கீடு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு 6 மாத சிறை தண்டனை அளித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜண்ணா. இவர் சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, கர்நாடக மாநில மக்களுக்கு எதிரானது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். மேலும், காவிரி வழக்கில் தீர்ப்பளித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாகூர், தற்போதைய நீதிபதிகளான தீபக் மிஸ்ரா, உதய் லலித், தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள், மத்திய நீர்வளத் துறை செயலாளர், கர்நாடக மற்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்கள் ஆகியோரை குற்றவாளிகளாக கருத வேண்டும்.
மேலும், ஒரு மாநிலத்தில் உள்ள தண்ணீரை பகிர்ந்தளிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. மேலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்கள் என நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை விடவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பு, இந்திய தண்டனை சட்டம் பிரிவு -219ன் படி குற்றமாகும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தை ேகட்ட உயர் நீதிமன்றம்், மனுவை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை தொடர்ந்த குற்றத்துக்காக மனுதாரருக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகள்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114- ஆக உயர்வு!
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல்
உ.பி.யில் வெடி விபத்து; 13 பேர் பலி
அசாமில் கள்ளச்சாராய பலி 85 ஆக உயர்வு
நடிகை விஜயலட்சுமி உடல்நிலை பாதிப்பு
கடந்தவை கையில் இல்லை ... நடப்பவை கையில் உள்ளன : வர்த்தக மாநாட்டில் மோடி பேச்சு